சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் வலியுறுத்தல்.. " சானல் 4 " முக்கிய ஆதாரம் என்கின்றனர்.. ஐ.நா அதிகாரிகள்...!

Posted by muhiloosai muhiloosai
Options
இரண்டு  ஐ.நா.அதிகாரிகள் இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்...யாரிடம் அல்லது யாரை என்பதை மட்டும் சொல்லவில்லை.. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஐ.நா மன்றம் விசாரிக்க வேண்டுமா அல்லது ஐ.நா மன்றத்தின் மனித உரிமை மீறல் கமிட்டி விசாரிக்க வேண்டுமா என்பதை கூறவில்லை..பொத்தம் பொதுவாக காற்று மண்டலத்தை நோக்கி கூறுகிறார்கள்...! இதில் வெட்கம் என்னவென்றால்..
ஒருவர் தற்போதைய அதிகாரி...மற்றவர் இலங்கையில் ஐ.நா வின் பிரதிநிதியாக இருந்த முன்னாள் அதிகாரி கோர்டன் வெய்ஸ்.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது பணியில் இருந்த இந்த அதிகாரி  கோர்டன் வெய்ஸ், யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனராம் மகிந்த ராஜபக்சே கும்பல்...அழுத்தம் என்றால் எப்படி உங்கள் காலில் விழுந்தா...அல்லது உங்களிடம் மன்றாடி,கெஞ்சி,கதறி கேட்டுக்கொண்டு அல்லது அழுத்தம் கொடுத்தனரா என்பதை கூராமால்..பொத்தம் பொதுவாக கூறுகிறார்..மகிந்த ராஜபக்சே கும்பல் காலில் விழுந்து கதறி, கெஞ்சியது மாதிரி தெரியவில்லை...கூப்பிட்டு நிறைய காசு கொடுத்திருப்பார்கள்...அல்லது கூப்பிட்டு மிரட்டி அனுப்பியிருப்பார்கள் என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்கிறார் இந்த  கோர்டன் வெய்ஸ்.
 
" சானல் 4 " வெளியிட்ட வீடியோ பதிவு உண்மைதான் என்று, ( அது போன மாசம், இது இந்த மாசம்...! ) வடிவேலு ஸ்டைலில் மாதா மாதம் யாராவது ஒரு,  இந்த உலக சர்கஸ் கோமாளிகளின் மன்றத்தின் அதிகாரி ஒருவர் அறிக்கை வெளியிடுவதை கடமையாக கொண்டுள்ளனர்...!
 
போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று வெளியை பார்த்து கூறுகின்றனர் இந்த அதிகாரிகள்..ஐயா, அடுத்த மாதம் இதுமாதிரி அறிக்கை வெளியிடும் பொழுது, தெளிவாக..இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் கோத்தபாயா ராஜபக்சே,சரத் பொன்சேகா மற்றும் ராணுவ உயர்அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்து இருக்கிறார்கள்..
 
யார் யார் அப்பாவி மக்களை, சரணடைய வந்த புலித் தலைவர்களை கொன்றார்கள்...இவர்கள்
மீது, இவர்களை குற்றவாளி என்று அறிவித்து,இவர்கள் மீது கடும் தண்டனை வழங்குமாறு உங்கள் கோமாளி கூட்டத்தின் தலைவர் பான் கி மூன் அவர்களிடம் சொல்வோம்..அல்லது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சொல்லி இலங்கை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்வோம் என்று தெளிவாக கூறுங்கள்...மக்களும் புரிந்து கொள்வார்கள்...
அதைவிடுத்து கொரிய மொழியில் பேசுவதுபோல் அறிக்கை..அல்லது செய்தி..!
 
உங்களுக்கு போதுமான ஆதாரங்கள் வேண்டுமென்றால்...முள்வேலி முகாமுக்கு செல்லுங்கள்..அங்கே இருக்கிறது இரண்டு லட்சம் ஆதாரங்கள்..முகாம் மக்கள் அனைவரும் உங்களுக்கு ஆவணங்கள்தான்...இதை வித்து விடுத்து அந்தப் படக்காட்சி உண்மை..
இந்த செய்தி உண்மை என்று அறிக்கை விடாதீர்கள்...
ஆட்டுக்கு தாடி இருப்பதுபோல் நீங்களும் உங்கள் ஐ.நா மன்றமும்...!

2 Comments

classic Classic list List threaded Threaded
prajendran.jayam2009gmail.com prajendran.jayam2009gmail.com
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் வலியுறுத்தல்.. " சானல் 4 " முக்கிய ஆதாரம் என்கின்றனர்.. ஐ.நா அதிகாரிகள்...!

the world comunity  india and srilanka all are clad coat suit mordran theif with out  conscience
kavitha kavitha
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் வலியுறுத்தல்..

In reply to this post by muhiloosai
உயிர் தப்பியவர்களின் சாட்சி மட்டும் போதுமே  சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க‌...............

ஆட்டுக்கு தாடி இருப்பதுபோல் நீங்களும் உங்கள் ஐ.நா மன்றமும்...! --- இது தான் உண்மை