Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கண்களைக் கட்டி சுட்டுக் கொல்கிற வீடியோக்கள் வெளியாகி உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று தஞ்சையில் தமிழ்த் தேச பொது உடமைக் கட்சியின் ...read more
by muhiloosai • | | 0 comments
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் தொடர்பாக செனல் 4 மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள சர்ச்;சைக்குரிய செய்தி சம்பந்...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் விரைவாக அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் கூறியுள்ளார். இலங்கையில் விரைவாக அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்ட...read more
by muhiloosai • | | 0 comments
நிறைவேற்று அதிகார முறைமை குறித்து விளக்கமளிப்பதற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு அருகதையில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். ...read more
by muhiloosai • | | 0 comments
இந்தியாவால் வழங்கப்பட்ட கடல் கண்காணிப்பு கப்பலை இலங்கைக் கடற்படையில் இணைத்துக் கொள்ளும் வைபவம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவால் வழங்கப்பட்ட ரோந்துக் கப்பலுக்கு சயூரால எனப் பெயரிடப்பட்டு அது உத்தியோகபூர்வமாக இலங்கைக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்...read more
by muhiloosai • | | 0 comments
வன்னி மக்களுக்குச் சொந்தமான 85 வீத நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித்திட்டத்தில் இறங்கியிருக்கின்ற அரசாங்கம், அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றது. இந்நிலையில், 180 நாள் வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அது எங்கே போய் முடியப்போகின்றது என்பதில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது என்று...read more
by muhiloosai • | | 0 comments
அடுத்தமாதம்(செப்டெம்பர்) இந்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஜ இலங்கை சென்று குமரன் பத்மநாதனை விசாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் கே.பியை தாம் விசாரிக்கவேண்டும் என ஏற்கனவே சி.பி.ஜ விடுத்த கோரிக்கை இலங்கை அரசால் நிரா...read more
by muhiloosai • | | 0 comments
எங்களுக்கு அபிவிருத்தி தேவை இல்லை எமக்கு தேவை எமது உரிமை” இவ்வாறு வலயம் இரண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் வயோதிப தாய் உரத்து சத்தமிட்டார் என ஒபெரேசன் யு.எச்.ஏ என்ற அமெரிக்க தன்னார்வ நிறுவனத்தின் ஆசிய இணைப்பாளர் செல்வி நிம்மி கெளரி நாதன் அவர்கள் தனது முகாம் அனுபவம் பற்றி எழுதிய குறிப்பில் வெளி...read more
by muhiloosai • | | 0 comments
கொழும்பு கோட்டைக்கும் வவுனியா – தாண்டிக்குளத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதையடுத்து, இந்த ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு அதிகாலை 3.15 மணிக்கு ஒரு ரயில் புறப்படுகின...read more
by muhiloosai • | | 0 comments
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில், கொலராடோ கப்பலில் எடுத்து வர...read more
by muhiloosai • | | 0 comments
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் நேற்று இலங்கை வந்துள்ளார். முன்னர் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற...read more
by muhiloosai • | | 0 comments
மற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்களான டோஜி மற்றும் சித்திக் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கும், பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போத...read more
by muhiloosai • | | 0 comments
திருகோணமலை மாவட்டம் வெருகலில் 75 முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 13 ஆம் நாள் மீளக்குடியமர்த்தப்பட்டதாக அரசாங்கம் 'அரசியல் கண்காட்சி' ஒன்றை நடத்திய போதும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் அந்த மக்களை அவர்களது இடங்களில் இருந்து துரத்தியடித்து விட்டார் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்...read more
by muhiloosai • | | 0 comments
சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச உலங்கு வானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு செல்வது தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரியவருகிறது. அண்மைக்காலமாக பசில் ராஜபக்சவுக்கு எதிரான முனைப்புக்களை மேற்கொண்டு வரும் கட்சிக்குள் முக்கிய பங்கு வகிக்கு...read more
by muhiloosai • | | 0 comments
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே வெறியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார். நோர்வே...read more
by muhiloosai • | | 0 comments
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான அனுமதி பெற்றுள்ள 478 மாணவர்களில் இன்று வரை 413 பேர் பதிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி பல்கலைக்கழகத்தில் அடுத்தாண்டும் சிங்கள மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலை - 94, விஞ்ஞானம் - 6...read more
by muhiloosai • | | 0 comments
மட்டக்களப்பு களுவான்கேணியில் கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர், வவுனியா நலன்புரி நிலையமொன்றிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் திரும்பியவர் எனத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது. 27 வயதான நடராஜா பாஸ்கரன் என்ற இந்நபர் ஏற்கனவே விடுதலைப் ப...read more
by muhiloosai • | | 0 comments
<nabble_img src="ballot-box.jpg" border="0" height="150" height="100"/>தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. மேற்படி தேர்தலுக்கான வ...read more
by muhiloosai • | | 0 comments
மொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளேமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் இவை இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேகத்தின் பேரில் கைதான விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்தக் கிளேமோர்கள் மீட்க...read more
by muhiloosai • | | 0 comments
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் விரைவில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள் வவுனியா அதிகாரிகளினால் திரட்டப்பட்டு, யாழ் மாவட்டத்தி்ன்...read more
1 ... 57585960
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan