சரத் பொன்சேகாவை சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தவும் - LIAM FOX

Posted by Kavi Kavi
Options
சரத் பொன்சேகாவை சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தியே விசாரிக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் LIAM FOX தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சிவில் நீதிமன்றத்தின் மூலமே நீதியானதும் ஒளிவுமறைவற்றதும் பக்கச் சார்பில்லாததுமான விசாரணையை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.