கால்நடைகளைத் தேடிச் சென்ற 6 தமிழர்கள் மகாஓயா பொலிஸாரால் கைது

Posted by Kavi Kavi
Options
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கால்நடைகளைத் தேடிச் சென்ற 6 தமிழர்கள் நேற்று மகாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உன்னிச்சை ,ஆயித்தியமலை,மற்றும் வவுணதீவு ஆகிய இடங்களைச் சேர்ந்த இந் நபர்கள் கைதாகி தடுத்து வைக்கப்டபட்டுள்ள சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது வதிவிட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்த பின்னரே கால்நடைகளை இவர்கள் தேடிச் சென்றிருந்ததாகவும் இரா.துரைரத்தினத்திடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைது தொடர்பாக மகாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தான் தொடர்பு கொண்டதாகவும் ,சந்தேகத்தின் பேரில் கைதான இந்நபர்கள் விசாரணையின் பின்பு விடுவிக்கப்படுவார்கள் என தனக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.