வடக்கின் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி பூர்த்தியாகியுள்ளது

Posted by muhiloosai muhiloosai
Options
வடக்கின் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி பூர்த்தியாகியுள்ளது
வடக்கில் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் பல்வேறு வகையான 847 நிலக்கண்ணி வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஆயிரம் படைவீராகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், முகமாலை, கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட பல பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.