கனடாவில் தரையிறங்கியுள்ள தமிழ் அகதிகளில் மேலும் 50 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்

Posted by Kavi Kavi
Options
கனடாவில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தரையிறங்கிய, சட்டவிரோத படகில் இருந்த 76 தமிழர்களில் 50 பேர் அடுத்த வாரத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக குடிவரவு சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 23 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 15 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு கடந்த புதன்கிழமையன்று கிடைத்திருந்தது.

இதேவேளை ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு சென்றடைந்த படகில்,இருந்த 76 பேரில் முதலில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 8 பேர் விடுதலை செய்யப்பட்டு கனடாவின் நகரங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த அகதிகளில், ஒருவர் தமக்கு தேவைப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.