மார்ச் 5 இல் அவசரகால சட்டம் காலாவதியாகின்றது; புதுப்பிக்க மீண்டும் பாராளுமன்றம் கூடுகின்றது.

Posted by muhiloosai muhiloosai
Options
மார்ச் மாதம் அவசரகால சட்டம் காலாவதியாகின்றமையால் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட மஹிந்த முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் மேலும் ஒருமாதத்திற்கு அவசர கால சட்டத்தினை நீடிக்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பாராளுமன்ற அனுமதி பெறவேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி 10 நாட்களுக்கு மட்டுமேஅவசரகால சட்டத்தினை அதுவும் ஒரு தடவையே அமுல்படுத்த முடியும் ஆகவேதான் மஹிந்த பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டவுள்ளார்.

இதன் மூலம் மீண்டும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் செய்ற்பாட்டு நிலமைக்கு கொண்டுவரப்படுவதனால் அவர்களுக்கான ஒருமாத சம்பளம் உட்பட அனைத்து சலுகைகளும் கொடுக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.