அடுத்தாண்டின் தெ.கி.பல்கலைக்கழக அனுமதி : 413 பேர் பதிவு

Posted by muhiloosai muhiloosai
Options
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான அனுமதி பெற்றுள்ள 478 மாணவர்களில் இன்று வரை 413 பேர் பதிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேற்படி பல்கலைக்கழகத்தில் அடுத்தாண்டும் சிங்கள மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலை - 94, விஞ்ஞானம் - 64, நிதி முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் - 195, அரபு மற்றும் இஸ்லாம் - 125 என்ற எண்ணிக்கையில் 478 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ள போதிலும் கலை - 92, விஞ்ஞானம் - 28, நிதி முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் - 177, அரபு மற்றும் இஸ்லாம் - 116 என்ற எண்ணிக்கையில் 413 மாணவர்களே பதிவு செய்துள்ளதாகப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.