சனல்4 ஒளிபரப்பிய காட்சி உண்மை ஆனால் சுட்டவர்கள் இராணுவத்தில் இருந்து ஓடியவர்களாக இருக்கலாம் - இராணுவ பேச்சாளர்

Posted by Ozone Ozone
Options
சனல் 4 ஒளிபரப்பிய காட்சியினை தமது இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் மிக நுட்பமாக பரிசோதித்ததாகவும் அந்த காட்சியில் இராணுவ வீரர்கள் தமிழ் இளைஞர்களை சுடும்போது சுட்டுக்கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் சிங்கள இராணுவத்தின் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் சீருடையில் இராணுவ பதவி நிலை பட்டி இருக்கவில்லை என்றும் அத்துடன் இராணுவத்தினரின் தலைமுடி வடிவம் தப்பிஓடிய இராணுவத்தினரின் தலை முடி வடிவத்தினை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அந்த சிங்கள கொலைவெறி காணொளி இல் வரும் காட்சிகளை மறைமுகமாக ஒத்து கொள்ளும் இராணுவம் அதனை உத்தியோக பூர்வ இராணுவம் செய்யவில்லை தப்பியோடிய இராணுவம் தான் செய்தது என கூறமுற்படுவதுடன் பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கவும் முயற்சி செய்கின்றனர்.

ஒரு கதைக்கு அவ்வாறு தப்பி ஓடிய இராணுவத்தினர் என சொன்னாலும் அவர்கள் சீருடை மற்றும் துப்பாக்கிகளுடன் ஏன் வன்னியில் இருக்கவேண்டும். வன்னி  ஓர் இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருப்பதால் அங்கு சிங்கள படைதலைமையின் அனுமதி இன்றி எவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் அங்கு இருக்க வேண்டும்?

அடுத்ததாக சிறிலங்கா இராணுவம் பட்டியில்லா சீருடைகளையும் அணிந்திருப்பது வழமை. போர்காலங்களில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த அல்லது கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சீருடைகளில் பட்டிகளல்லா சீருடைகளும் தென்பட்டவைக்கான ஆதாரங்கள் அப்போது இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.