2543 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை

Posted by muhiloosai muhiloosai
Options
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் விரைவில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள் வவுனியா அதிகாரிகளினால் திரட்டப்பட்டு, யாழ் மாவட்டத்தி்ன் செயலகத்திற்கும், பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 2543 குடும்பங்களே விரைவில் மீள் குடியயேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வவுனியா அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் விபரங்கள் குறித்து யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில் அதிகாரிகளும், பொலிசாரும் நடத்திய விசாரணைகள் முடிவடைந்து, இந்தக் குடும்பங்கள் தொடர்பான பட்டியல்கள் இப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட இரண்டாம் கட்டமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 5 ஆயிரத்து 167 குடும்பங்கள் தொடர்பான தகவல்களும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 974 பேரின் விபரங்கள் தொடர்பாக சிவில் அதிகாரிகளினாலும், அந்தந்த பிரதேசத்து பொலிசாரினாலும் விசாரணைகளின் ‘மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.