தபால் மூல வாக்களிப்பு மார்ச் 25இல் ஆரம்பம்

Posted by muhiloosai muhiloosai
Options
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகத் தெரிவித்த திசாநாயக்கா இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட ஐம்பதினாயிரம் அதிகம் எனவும் தெரிவித்தார்.