முகாம்களில் இருந்து மனித உரிமை குழுவுக்கு நாளாந்தம் 25 – 30 முறைப்பாடுகள் கிடைக்கின்றன : எதுவும் தீர்க்கபடவில்லை

Posted by Ozone Ozone
Options
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25 – 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணைக்குழுவினர் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதையடுத்தே, முகாம்களில் இருந்து இவ்வாறு தமக்கு முறைப்பாடுகள் வரத் தொடங்கியிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.