லசந்த கொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கைது

Posted by muhiloosai muhiloosai
Options
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
 
இவர்களில் அதிகாரிகள் தரத்திலான பலரும் அடங்குவதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு இவர்களிடம் நடத்தப்பட்டுள்ள விசாரணைகளிலிருந்து லசந்தவின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே இந்த விசாரணைகளுக்காக எரித்திரியா நாட்டில் ராஜதந்திரப் பணிகளுக்குச் சென்றிருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர திருப்பி அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
இது குறித்து எமது கொழும்பு நிருபர் கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகவே இந்த விசாரணை தூசு தட்டப்படுகிறது எனவும் தெரிவித்ததுடன் மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர போன்று நாட்டில் படுகொலைகளைப் புரிந்த பலரும் வெளிநாடுகளில் றாஜதந்திரப் பதவிகளில் செயலாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.