13 இலங்கையர்களுடன் சவூதி கப்பல் சோமாலிய கொள்ளையர்களால் கடத்தல்

Posted by muhiloosai muhiloosai
Options
கிரேக்க நாட்டு கப்டனும், பதின்மூன்று இலங்கையர்களும் சென்ற சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான ‘எம்.டி. அல் நிஸார் அல் சவுதி’ என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நேற்று கடத்தப்பட்டுள்ளது. 5, 136 மெற்றிக் தொன் பொருட்களை எடுத்துச் செல்லும் போதே இக்கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்துக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கிறது.

குறித்த கப்பல் ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவை நோக்கிச் செல்லும் வழியில் சோமாலியர்களால் கடத்தப்பட்டுள்ளது. கப்பல் கடத்தப்படும்வேளை அதில் மேற்படி 14 பேர் மட்டுமே இருந்துள்ளனர். 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தந்தால் இக்கப்பலிலுள்ள பொருட்களைத் தாம் எடுத்துவிட்டு வெறும் கப்பலை விடுவிக்க தயாராக உள்ளதாக கொள்ளைக்காரர்கள் அறிவித்துள்ளனர்.