மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 106 மில்லியன் ரூபா செலவில் குண்டுதுளைக்காத புதிய கார்கள்.

Posted by Kavi Kavi
Options
மஹிந்த தேர்தல் பிரச்சாரங்களுக்குச் சென்று வரவென 106 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரமும் சூடுபிடித்து வருகின்றது. இந்த தேர்தல் பிரச்சாரங்களிற்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத புதிய கார்கள் இரண்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பி.எம்.டபிள்யூ(BMW) வகையிலான இக்கார்கள் நேற்றுக் காலை 9.30 அளவில் மலேஷியன் எயர்லைன்ஸ் மூலம் ஃபிராங்ஃபர்ட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒரு காரின் விலை வரி அனைத்தையும் உள்ளடக்கி 53 மில்லியன் ரூபா என சுங்கவரித்துறை பேச்சாளர் கூறினார். பண்டாரநாயக்கா சர்வதேச விமான தகவல்களின்படி, இவ்விரு கார்களும் சுங்கவரித்துறைக்கு கொண்டுசெல்லப்படாமல் ஜனாதிபதிச் செயலாளரால் நேரடியாக விமானநிலையத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.