வவுனியா தடுப்பு முகாமிலிருந்த தமிழ் இளைஞர்களில் மேலும் 100 பேர் பூஸா சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

Posted by muhiloosai muhiloosai
Options
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை பயங்கரவாத தடுப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்ட இந்த தமிழ் இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மனித உரிமைகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

இதில், கிளிநொச்சியைச் 35 பேர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த 13 பேர், வவுனியாவைச் சேர்ந்த 15 பேர், மன்னாரைச் 7 பேர், மட்டக்களப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இவ்வாறு பூஸாவிற்கு அனுப்பப்பட் டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் வைக்கப்படும் என்று இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து இரு கட்டங்களாக பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 104 பெண்களின் விவரங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா தடுப்பு முகாமிலுள்ளவர்கள் ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி இவ்வாறு அடிக்கடி கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமுக்கு அனுப்பப்படுவதால் தமிழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.