காணாமல் போனோர் பற்றி வவுனியாவில் முறையிட 024 2222029 024 2222029 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்க

Posted by Ozone Ozone
Options
இறுதிக்கட்ட மகிந்த அரசின் தமிழர் மீதான யுத்தத்தின் போது காணாமல் போன, தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது காணாமல் போவோர் பற்றி முறைப்பாடு செய்வதற்கு வவுனியாவில் மனித உரிமை கண்காணிப்பகம் இயங்குகின்றது.

அங்கு சென்று முறைப்பாடுகளை செய்யமுடியும். இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களும், பொதுமக்களும் மனித உரிமைகள் தொடர்பான தமது பிரச்சினைகள் குறித்து வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என்று வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

தொலைபேசி எண்:  024 2222029  024 2222029    முகவரி தேசிய மனித உரிமைகள் ஆனைக்குழு, பிராந்திய செயலகம், புகையிரத வீதி, வவுனியா.