போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா மீண்டும் வலியுறுத்து

Posted by muhiloosai muhiloosai
Options
இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வருடாந்த செயலமர்வில் ஆண்டறிக்கையைச் சமர்பித்துப் பேசிய ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்க வேண்டும் என்றும் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் இது குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அசட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.