இலங்கை பிரச்சனையில் புதிய முடிவுகளை நோக்கி - இங்கிலாந்து அமெரிக்க நாடுகள்..! அலறுகிறார் இலங்கை அமைச்சர்...!

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி, " பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையானபொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோளரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று " ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
இவை ஒருபுறமிக்க, உலகத் தமிழ் பேரவையின் சமீபத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டன் அமைச்சர் மிலிபான்ட் தெரிவித்த கருத்துக்களும்...இங்கிலாந்து பிரதமர் பிரவுன் பேசிய விசயங்களும் அறிந்ததே..தற்பொழுது அமெரிக்க செயலர் ஒருவர், புலம்பெயர் மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்களை கூறியதால் இலங்கை சிங்கள பேரினவாதிகள் இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை முற்றுக்கையிட்டு  பெரிய போராட்டம் நடத்தினர் என்பதும் அனைவரும் அறிந்ததே..!  இவையெல்லாம் கருத்தில் கொண்டே இலங்கை அமைச்சர்,கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
மேலும் கூறுகையில்,
 
இலங்கையில் மேற்குலக நாடுகள் தங்களுக்கு உகந்த ஒரு பொம்மை அரசை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்... மகிந்த ராஜபக்சே அரசு...! என்ன மாதிரி அரசு, உலகிலேயே அதிகப்பட்ச சுதந்திரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு புனித அரசு  என்று சொல்கிறாரா...? இந்த அமைச்சர்...விட்டால் எங்களின் அரசுதான், உலகிலேயே  மிகச்சிறந்த ஜனநாயக  அரசு என்று கூறினாலும் கூறுவார்கள்..!
 
இலங்கை யுத்தம்..விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று பட்டியலில் அடைத்த இந்த பிரிட்டனும், அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும், இந்த தங்களது முந்தைய முடிவில் இருந்து பின்வாங்கி, தற்பொழுது ஈழதமிழர்களின் வாழ்வுரிமையை..
புணரமைப்பை உணர்ந்துள்ளன என்று அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்...வரும் காலங்களில் நல்ல முடிவுகள் ஈழதமிழர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அறிய முடிகிறது தற்போதைய இந்த அணுகுமுறையால்...!