இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம்

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2009ம் ஆண்டில் இலங்கைக்கு  மொத்தமாகக் கிடைத்த 2.2 பில்லியன் டொலர்களில் 1.2 பில்லியன் டொலர்களை சீனாவே வழங்கியிருந்தது. இது கிட்டத்தட்ட 55% ஆகும்.

இலங்கையின் வீதி அபிவிருத்தி, அனல்மின் உற்பத்தி, துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு அப்பால் கனரக ஆயுதங்களையும் படைத்துறை உதவிகளையும் சீனா வழங்கி வருவது சுட்டிக்காட்டத்தக்கது.