பாதுகாப்பு நீக்கப்பட்டதன் இறுதி இலக்கு பிள்ளையான்!

Posted by muhiloosai muhiloosai
Options
பாதுகாப்பு கடந்த வார இறுதியில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தகவலளித்த அவர், இவ்வாறு பாதுகாப்பு நீக்கப்பட்டமையானது மிகவும் ஆபத்தானதும், அச்சுறுத்தலானதும் எனக் கூறினார். தமது கட்சி செயற்பாட்டாளர்களுக்கு விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந்து மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசாங்க அனுசரணையுடன் செயற்பட்டுவரும் துணை இராணுவக் குழுவினராலும் பாரிய உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இவ்வாறு பாதுகாப்பு நீக்கப்பட்டமையானது குறிப்பிட்ட ஒருசிலரது வேண்டுகோளுக்கமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இவ்வாறு பாதுகாப்பு குறைக்க அழுத்தம் கொடுத்த
 
நபர்களின் இறுதி இலக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் எனவும் எமக்குத் தகவலளித்த கட்சியின் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.