அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு ஆன்லைனில் படிவங்கள்

Posted by muhiloosai muhiloosai
Options
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், செய்ற்திறன் மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா தனது வீசா வழங்கும் நடவடிக்கைகளை ஆன்லைன் ஊடாக நடத்தவுள்ளது. இந்நடைமுறை உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூததரங்களில் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி வருகின்ற 17 ஆம் திகதி முதல் ஆன்லைன் விண்ணப்பப்படிவங்களையே, அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நிரப்ப வேண்டும்.  இந்தப் படிவங்கள் வருகின்ற 12 ஆம் திகதியிலிருந்து ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கிவிடும்.

இலங்கை மற்றும் மாலைதீவைச் சேர்ந்தவர்கள் https://ceac.state.gov/GENNIV என்ற வலைத்தள முகவரியிலுள்ள புதிய DS-160 விண்ணப்பப்படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும், வீசாவுக்குரிய புகைப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வீசாவுக்கு விண்ணப்பிக்கும் முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீசா கிடைப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஒரு மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள அமெரிக்க தூதரகம் தகுந்த ஆவணங்கள் மிக அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.