பொன்சேகா மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாகவும், அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொன்சேகா மீதான புகாரை ராணுவ கோர்ட்டு விசாரிக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், "சரத் பொன்சேகாவுக்கு எதிரான ஆதாரங்களை 25-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ளனர்.

வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, வழக்கமான ராணுவ கோர்ட்டு விசாரணையை ராணுவம் மேற்கொள்ளும். இதில் அரசியல் எதுவும் கிடையாது' என்றார்.