நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டும்:இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தவரும் ஏற்கும் விதத்திலான நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் என்று அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.


போர் நிறைவடைந்துள்ளதால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வைத் தொடங்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.