அவசர காலச் சட்டத்தை நீடிக்க கைச்சாத்திட்டார் ஜனாதிபதி

Posted by muhiloosai muhiloosai
Options
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன் றைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கென நாடாளுமன் றம் எதிர்வரும் 9ஆம் திகதி விசேடமாகக் கூடவுள்ளது.

நாடாளுமன்றம் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி கலைக்கப்பட்டது. இந்நிலை யில் அவசரகாலச்
 சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் தேவை அர_க்கு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நாடாளுமன்றம் விசேடமாகக் கூட்டப்பட்டு பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்புக் கருதி 1983 ஆம் ஆண்டு இந்த அவசரகாலச் சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது. அது முதல் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நீடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.