கோரிக்கை விடுக்கும் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு: லக்ஷ்மன் ஹூலுகல்ல

Posted by muhiloosai muhiloosai
Options
பாதுகாப்புக் கோரும் கட்சித் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டு பாதுகாப்புக் கோரும் கட்சித் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியானவர்கள் முன்வைக்கும் காரணங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அதனடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிரணியைச் சேர்ந்த முன்னாள் எம். பிக்கள் சிலர் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது .