விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் கைதா? பெயரை வெளியிட மறுப்பது ஏன்?

Posted by muhiloosai muhiloosai
Options
விடுதலைப்புலிகளின் வெளியுறவு பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு கொண்டு வரப்பட்டு அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலும் ஒரு முக்கிய தலைவர் சிக்கியுள்ளார். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் தங்கியிருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். இயக்கத்துக்கு வெளிநாடுகளில் பணம் திரட்டியவர்.

சொந்த வேலை காரணமாக கொழும்புக்கு வந்த அவரை இலங்கை போலீசார் கைது செய்தனர். கொழும்பு புறநகர் பகுதியில் டெகிவேலாவில் அவரது வீடு உள்ளது. அங்கு பதுங்கியிருந்தபோது பிடிபட்டதாக இலங்கை அரசின் ரேடியோ அறிவித்தது.

ஆனால் அவரது பெயரை இலங்கை அரசு வெளியிட வில்லை. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதியே அவர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.