தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறிவிட்டனர்: கச்சத்தீவு வந்த தமிழர் தகவல்

Posted by muhiloosai muhiloosai
Options
தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துகின்றனர் என்று கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த இலங்கை தமிழர் கூறியுள்ளார்.

ராமேசுவரம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இந்த விழாவில் இலங்கை அரசின் அழைப்பின்பேரில் மத்திய அரசின் அனுமதியுடன் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், வேர்கோடு பகுதிகளை சேர்ந்த 2910 பேர் பங்கேற்றனர். 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த விழாவில் தமிழர்களை விட இலங்கை பக்தர்கள் குறைவாக பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற இலங்கை தமிழர் அமுதன் கூறியதாவது,

இலங்கையில் கடந்த வருடம் 5 வது மாதம் நடந்தபோரின்போது மனைவி மோனிடா மற்றும் குழந்தையுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்தேன். அப்போது பீரங்கி தாக்குதலில் வீட்டுக்குள் வந்த குண்டு தாக்கி கால் துண்டாகி படுகாயம் அடைந்தேன்.

எனது உறவினர்கள் இதில் இறந்து விட்டனர். அங்கிருந்து மீண்டும் மட்டகளப்பில் சிகிச்சை பெற்றேன். அதன் பின்னர் வவுனியா முகாமில் 20 நாட்கள் தங்கி இருந்தேன். அங்கிருந்து விடு தலையாகி நெடுந்தீவில் வசித்து வந்தேன். இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டு விட்டது.

தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தி வருகின்றனர். போருக்கு பின்னர் கடற்படையின் கெடுபிடிகள் குறைந்துள்ளது. எனது மனநிம்மதிக்காகவும், இனி தமிழ் மக்கள் துயரத்தை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்ய சிரமத்துடன் கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன் என்றார்.