இலங்கை பொருளாதாரம் மீழ முடியா நிலையில் தான் இன்னமும் உள்ளது - டி.பி.ஜயசுந்தர

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கை பொருளாதாரம் மீழ முடியாத நிலையில் தான் உள்ளது என டி.பி.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்  கூறப்பட்டுள்ள பொத்த வருமானத்தினை பெற முடியவில்லை. அதே வேளை பொது செலவு அதிகரித்துள்ளது.
இதனால் 2009 ஆம் ஆண்டு அவரவு செலவு திட்டத்தில் குறித்து ஒதுக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியாமல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் ஜயசுந்தர.

இலங்கை பொருளாதாரம் வளர்கின்றது என கூறினாலும் அது சாதகமான இடத்திற்கு இன்னமும் வரவில்லை.2005 இல் 82 விழுக்காட்டில் இருந்த பொருளாதாரம் 2008 இல் 86.3 ஆக உயந்தது உண்மைதான் ஆனால் பொதுபடுகடன்கள் மீதான வட்டி அதிகரிப்பு, பொது முதலீடுகள் மீதான அதிகரிப்பு என்பன இந்த வளர்ச்சியினை விழுங்கியுள்ளன என மேலும் கூறியுள்ளார்.

2009 இல் வருமானம் 23.6 பில்லியன் ரூபாவினால் குறைந்ததும் அதே வேளை செலவு  106 பில்லியனாக அதிகரித்தமையும் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் எனவும் கூறினார்.