சரத் ஆதரவாளர் மீது பெல்ஜியம் சார்பில் அரசு வழக்கு - பெல்ஜியம் தமக்கு தெரியாது என மறுப்பு

Posted by muhiloosai muhiloosai
Options
பெல்ஜியம் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவரான சேனக டி சில்வா என்பவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது என சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி மோசடி சம்பந்தமாக சேனக டி சில்வா பெல்ஜியத்தில் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது குறித்து வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கு எந்தவித வேண்டுகோளும் விடுக்கப்படவில்ல எனத்தெரிவிக்கப்பட்டது.  கொழும்பிலுள்ள பெல்ஜியத்தூதரகம் கூட தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளது.