கிளி நொச்சியில் ஈ.என்.டி.எல்.எஃப் முகாம் அமைப்பு !!

Posted by muhiloosai muhiloosai
Options
கிளி நொச்சியில் இந்திய இலங்கை கூட்டு ஆதரவில் செயற்படும் E.N.D.L.F ஒட்டு குழுவினர்  முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கிளி நொச்சியில் ஜெயந்தி நகர் பகுதியில் முன்னர் சர்வதேச ஆங்கில பாடசாலையாக இயங்கிய கட்டடத்தினையே இவ்வாறு முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரும்  சில  ஒட்டுக்குழு அங்கத்தவர்களும் துப்பரவாக்கி வருகின்றனர்.

இந்த காணியும் கட்டடமும் குருகுலம் சிறுவர் இல்லம் மற்றும் குருகுலம் ஆச்சிரமம் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு தமது வீடுகளைப் பார்க்க சென்ற மக்களிடம் இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் கலந்துரையாடியுள்ளனர்.