களணிக்கு வர வேண்டாம் என்று சொல்ல மர்வின் சில்வாவுக்கு உரிமை இல்லை - அநுர குமார திஸாநாயக்கா

Posted by muhiloosai muhiloosai
Options
களணிக்கு வரக்கூடாது என்று சொல்லுவதற்கு மர்வின் சில்வாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார்.

ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் களணித்தொகுதி அமைப்பாளரான அமைச்சர் மர்வின் சில்வா நேற்று ஐக்கிய தேசிய் கட்சியின் மேடையில் ஏறியிருந்தார்.யானை வரலாம்.ஆனால்,அன்னம் வரக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

நாம் அன்னம் சின்னத்தில் வரவில்லை.கிண்ணம் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றோம்.அரசாங்கம் எமக்குப்பயப்படுகிறது என்றும் அநுர குமார திஸாநாயக்கா மேலும் தெரிவித்தார்.