த.ம.வி.பு.க. உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம் : முதலமைச்சர் பொலிஸ் மா அதிபருக்குக்கடிதம்

Posted by muhiloosai muhiloosai
Options
 கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களதும் பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் இராணுவ பாதுகாப்புகள் நீக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே இந்தப் பாதுகாப்பும் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதேவேளை, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ விடுத்திருந்த செய்தி ஒன்றில்,

எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர், செயலாளர் தவிர்ந்த அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.