அமெரிக்க அரசின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதுப் பட்டியலில் சிறிலங்கா சமூகசேவகி

Posted by muhiloosai muhiloosai
Options
அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத்துலக அளவில் 2010ம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்துப்பேரில் சிறிலங்காவை சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சில மஜீத்தும் [Ms.Jansila Majeed] ஒருவர்.

20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் [U.S. Secretary of State Hilary Clinton] திங்கள்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சில மஜீத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மார்ச் மாதம் 10ம் தேதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கௌரவிப்பார்.

அனைத்துலக அளவில் பெண்கள் உரிமைக்காகவும் முன்னேற்றதிற்காகவும் சிறப்பு துணிச்சல் மற்றும் தலைமை பதவிகளை வகித்து போராடி வரும் பெண்களை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் அமெரிக்க அரசு செயலாளர் கொண்டலீசா ரைசால் [Condoleezza Rice] துவங்கப்பட்டது.

அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பர்குதியை சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் கல்வி, இளைஞர்களுடன் இணைந்து செயல்படுதல், நிவாரண பணிகள், அமைதியை உருவாக்குதல், பெண்களுக்கான பிரச்சினைகள், பெண் உரிமை மற்றும் பல சிறுபான்மை இன மக்களுக்கான திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.

உள்நாட்டிலேயே சுமார் 20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் மஜீத் இடம்பெயர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை திறன் மேம்பாடு பயிற்சிகள், மகளிர் மேம்பாடு, உடல்நலம் குறித்த முக்கிய விடயங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றி வருகிறார். இவர் தன்னுடைய சமூக சேவையை 1992ம் ஆண்டு 5 பேருடன் சேர்ந்து ஆரம்பித்தார்.

பொதுவாக இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கும் தன் சமுதாயத்தினருக்கும் ஏற்பட்ட அலட்சியங்களையும் தடைகளையும் தாண்டி மிகவும் உணர்ச்சி பூர்வமான அரசியல் சூழ்நிலையிலும் பெண்ணுரிமை, சிறுபான்மையினர் நலம் போன்றவற்றில் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் மஜீத் பணியாற்றி வெற்றி கண்டுள்ளதாக விபரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெறப் போகும் மற்ற பெண்கள்:

ஷக்ரியா அசில் [ஆப்கானிஸ்தான்], கால். ஷபிகா குரைஷி [ஆப்கானிஸ்தான்], அன்றெல ஹென்றிகுஸ் [சைப்ரஸ்], சோனியா பிரரே [டொமினிக்கன் ரிபுப்ளிக்], சாடி சதர் [ஈரான்], அன் ந்ஜோகு [கென்யா], Dr. லீ ஏ-ரன் [ரிபுப்ளிக் ஒப் கொரியா], சிஸ்டர் மரி கிளைடே நட்டப் [சிரியா], மற்றும் ஜெஸ்டின முகோகோ [ஜிம்பாப்வே].

Shukria Asil [Afghanistan], Col. Shafiqa Quraishi [Afghanistan], Androula Henriques [Cyprus], Sonia Pierre [Dominican Republic], Shadi Sadr [Iran], Ann Njogu [Kenya], Dr. Lee Ae-ran [Republic of Korea], Sister Marie Claude Naddaf [Syria], and Jestina Mukoko [Zimbabwe].