வன்னியில் கடந்த வருடம் நடைபெற்ற போரில் நான் உயிர்தப்புவேன் என எண்ணவில்லை: அருளம்மா தம்பிராஜா

Posted by muhiloosai muhiloosai
Options
வன்னியில் போர் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லா பக்கமும் எறிக்ணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர்தப்புவோம் என எண்ணவில்லை என வன்னியில் நடைபெற்ற போரில் உயிர்தப்பிய 99 வயது நிரம்பிய அருளம்மா தம்பிராஜா ஐ.ஆர்.ஐ.என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்ததாக அது தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வருடம் இந்த நேரம் வன்னியில் நடைபெற்ற போரில் சிங்கியிருந்த பல ஆயிரம் பொதுமக்களில் அருளம்மா தம்பிராஜாவும் (99) ஒருவர். சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகருக்கு அண்மையான கிராமமான நவஜீவனம் பகுதியை கடந்த வருடம் ஜனவரி மாதம் மோதல்கள் அண்மித்த போது அருளம்மாவின் குடும்பம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் ஆழமான பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தது.

அருளம்மாவை அவரின் மகன்களும், பேரப்பிள்ளைகளும் கதிரையில் வைத்து தூக்கிச் சென்றிருந்தார். 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமுக்கு அருளம்மா தனது குடும்பத்துடன் வந்துசேர்ந்தார்.

அவர் தற்போது கொழும்பில் உள்ள தனது உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றார்.

போர் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லா பக்கமும் எறிக்ணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர்தப்புவோம் என எண்ணவில்லை, அங்கு ஒவ்வொரு வினாடியும் ஒரு வாழ்நாளகவே நகர்ந்தன என அருளம்மா தெரிவித்துள்ளார்.

அன்றைய பயங்கர அனுபவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எனது மகன்கள் என்னை தூக்கி வந்தனர், ஒரு இடத்தில் சொற்ப நேரமே எம்மால் தங்க முடிந்தது. அது மிகவும் பயங்கரமான காலம். உணவை பெறுவதும், காலைக்கடன்களை முடிப்பதும் கடினமானதாகவே இருந்தது. அதன் போது உயிரை இழக்கவும் நேரலாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டிருந்தன.

கடவுளின் கருணையால் நான் தற்போது இங்கு இருக்கிறேன். அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என எமக்கு தெரியவில்லை. எல்லா பக்கமும் மக்கள் அச்சத்துடன் ஒடிக்கொண்டிருந்தனர். மிகப்பெரும் குண்டு வெடிப்புக்கள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் எனது கண்களை மூடிக்கொண்டேன்.

அது ஒரு கெட்ட கனவு. எனது வாழ்வில் பல சம்பவங்கள் நடைபெறறுள்ளன. நான் எனது 60 ஆவது வயதுகளில் பேரப்பிள்ளைகளை கண்டபோதே போர் ஆரம்பமாகியிருந்தது. என்னால் கற்பனை செய்யமுடியாத நிகழ்வுகளை எல்லாம் நான் கண்டேன். பல மரணங்களையும், பேரழிவையும் கண்டேன்.

எமது கிராமத்திற்கு திரும்பவும் செல்லலாம் என அதிகாரிகள் கூறியபோது, நாம் உடனடியாக திரும்பிச் செல்ல விரும்பவில்லை. எமது கிராமத்தில் என்ன எஞ்சியுள்ளன என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எமது வீடு அழிவடைந்துள்ளது. அங்கு எல்லா இடமும் கண்ணிவெடிகள் உள்ளன. நான் ஒய்வு எடுக்க வேண்டும் என எனது பிள்ளைகள் விரும்புகின்றனர்.

எனது வழ்க்கையில் 100 வயது வரை வாழ்ந்தவர்களை நான் காணவில்லை. எனது கிராமத்தில் இருந்தவர்களில் யாரும் அவ்வாறு நீண்டகாலம் வாழ்ந்ததில்லை. நான் தான் முதல் தடவையாக அவ்வாறு வாழ்கிறேன். எனவே எனது கிராமத்திற்கு சென்று அதனை நான் கொண்டாட விரும்புகிறேன்.

எனது கிராமத்திற்கு சென்று முன்னரைப்போல அமைதியாகவும், கவலைகள் இன்றியும் வாழவே நான் விரும்புகிறேன். அது தான் எனது கனவு என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment

classic Classic list List threaded Threaded
prajendran.jayam2009gmail.com prajendran.jayam2009gmail.com
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வன்னியில் கடந்த வருடம் நடைபெற்ற போரில் நான் உயிர்தப்புவேன் என எண்ணவில்லை: அருளம்மா தம்பிராஜா

you are our pokkisam long live