பொன்சேகா நடத்தப்படும் விதம் அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர்

Posted by muhiloosai muhiloosai
Options
சரத்பொன்சேகா கைது செய்யப்பட்ட விதமும் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற முறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகாவின் கைதிற்கு எதிராக இணையத்தளத்தினூடாக கையெழுத்து திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே சரத் என் சில்வா இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தைப் பற்றி சில பேர் பேசுகின்ற போதிலும்  இவை எல்லாவற்றையும் விட அரசியல் சாசனம் மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதம நீதியரசர் தெரிவித்தார்.