பொதுத் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்?

Posted by muhiloosai muhiloosai
Options
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஒரே காரணத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசர காலச் சட்டம் மாதந்தோரும் வாக்கெடுப்பின் அடிப்படையில் நீடிக்கப்பட்டு வருகிறது. ஒருமாதமேனும் நீடிக்கப்படாவிடின் அவசர காலச் சட்டம் அமுலிலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.