இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்

Posted by muhiloosai muhiloosai
Options
இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார்.இதனால்தான் அவர் இந்தோனேஷிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .

அவர் படகில் இருந்து தப்பிசென்றுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் தப்பிச்செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படவில்லை.

இந்த நிலையில் அவர் தப்பிச்சென்றிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது எனவே அவர் கடத்தி செல்லப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.