பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு

Posted by muhiloosai muhiloosai
Options
வடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

மக்கள் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலையிலும் குடியேற்றப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத அவல நிலையிலும் ஆங்காங்கே பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதில் மந்தகதி காட்டும் அரசு, தனது அதிகாரங்களை நிறுவும் வகையில் இவ்வாறான செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.