எனது விடுதலையில் அரசாங்கம் அரசியல் நடத்துகிறது என லங்கா பத்திரிகை ஆசிரியர் குற்றச்சாட்டு

Posted by Kavi Kavi
Options
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட இருந்த என்னை சில மணி நேரங்கள் முன்னதாக விடுவித்து விட்டு தானே எனது விடுதலைக்குக் காரணம் என மகிந்த றாஜபக்சவும் அவரது அரசாங்க அமைச்சர்களும் உரிமை கோருவதாகவும் இது ஒரு அரசியல் நாடகம் எனவும் நேற்று விடுதலை செய்யப்பட்ட லங்கா செய்தித்தாளின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த குறிப்பிட்டுள்ளார்

எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 15 நாட்கள் தன்னை தடுத்து வைத்திருந்தமை சட்டவிரோதமானது எனவும் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் சந்தன தெரிவித்தார்