பிரதி அமைச்சர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே மகாநாயக்கர்களின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Posted by Kavi Kavi
Options
பிரதி அமைச்சர்கள் இருவர் விடுத்த அச்சுறுத்தல் காரணமாகவே மகாநாயக்கர்களின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இநத மாநாட்டை நடத்தக் கூடாது என்றும் அவ்வாறு நடத்தும் பட்சத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இரண்டு பிரதி அமைச்சர்கள் மகாநாயக்கர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் இதன் காரணமாகவே தலதா மாளிகையின் புனிதத்துவம் கருதி மகாநாயக்கர்கள் மாநாட்டை பிற்போட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.