ஜி.எஸ்.பி சலுகைக்காக இலங்கையை விற்கத் தயாரில்லை.

Posted by Kavi Kavi
Options
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஜி.எஸ்.பி சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்டை விற்பதற்கோ அடகு வைப்பதற்கோ இந்த அரசாங்கம் தயாரில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்றால் தெரிவித்துள்ளார்.

சிறிய சலுகை ஒன்றை வழங்குவதற்காக ஒரு நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள கப்றால் ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காமையால் நாட்டிற்குப் பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அதனை ஈடுகட்டுவதற்குரிய வழிவகைகளை அரசாங்கம் ஏற்கனவே தயாரிக்க ஆரம்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.