பிரதேச செயலகங்களில் கடவுச் சீட்டினைப் பெறும் வசதி வடக்கு கிழக்கிலும் அறிமுகம்

Posted by Kavi Kavi
Options
வடக்கு கிழக்கு மக்கள் கடவுச் சீட்டைப் பெறுவதை இலகுபடுத்தும் பொருட்டு அந்தந்தப் பிரதேச செயலகங்களில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வசதி பல காலமாக தென்பகுதி மாவட்டங்களில் இருந்து வருகிறது.

தற்போது கடவுச் சீட்டுப் பெறுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கொழும்புக்கு வர வேண்டியுள்ளது. இந்த சிரமத்தை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த வசதி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்