கோத்தபாய பற்றி செய்தி தருவது யார்?

Posted by Kavi Kavi
Options
அரசதலைவர் மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, அரசதலைவரின் ஆலோசகர் பசில் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து தகவல் தருபவர் யார் என்று தன்னை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாக 18 பின்னர் தடுப்புக்காவலிலிருந்து விடுதலையான லங்கா பத்திரிகை ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார்.

தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் -

ராஜபக்ச சகோதரர்கள் பற்றி செய்தி தருபவர் யார் என்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தனிப்பட்ட விரோதம் ஏதாவது உள்ளதா என்றும் அவர்களை பற்றியே தொடர்ந்து விமர்சனம் செய்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுவது ஏன் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னிடம் விசாரணை செய்ததாக கூறினார்.

அதற்கு தான் பதிலளிக்கையில் ராஜபக்ச சகோதரர்கள் அனைவருமே அரசு சேவையில் உள்ளவர்கள் என்ற வகையில் மக்களது வரிப்பணத்திலேயே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் தொடர்பாக விமர்சனம் செய்வதற்கு எமக்கு உரிமை உள்ளது என்று கூறினேன்.

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறும் விதிமுறையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.