புலம்பெயர்ந்த சிங்களமக்கள் ஐ.நா. தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Posted by Kavi Kavi
Options
பொன்சேகாவை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மகிந்த அரசினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். மகிந்த அரசினை தூற்றியும் பொன்சேகாவை விடுவிக்க வலியுறுத்தியும் பதாகைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் பொன்சேகாவை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் கையளித்தனர்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை பிரான்ஸில் சிறிலங்கா தூதுரகத்துக்கு முன்பாக பொன்சேகாவை விடுவிக்கக்கோரியும் சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கோரியும் அங்கு வாழும் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பிரான்ஸை தளமாக கொண்டியங்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. ஆதரவு அமைப்புக்களும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆரவாளர்களும்கூட இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.