ஹக்கீமின் பாதுகாப்பு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது

Posted by Kavi Kavi
Options
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீமின் பாதுகாப்பு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹக்கீமுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த 4 காவற்துறையினரும் நேற்றிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

முன்னதாக 16 பேரைக் கொண்ட பொலிஸ் பாதுகாப்புக் குழு சில மாதங்களுக்கு முன்னர் 4 பேராகக் குறைக்கப்பட்டிருந்தது.