தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்கிறது இந்தியா

Posted by Kavi Kavi
Options
ஈழத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய வகையிலான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சகல மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை இந்தியா ஆதரிக்கிறது எனக் குறிப்பிட்ட கிருஸ்ணா இது குறித்து மகிந்த றாஜபக்ச அக்கறையோடு செயற்படுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ராஜாஜி ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றும் போதே கிருஸ்ணா இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.