ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை: நளினி

Posted by Kavi Kavi
Options
ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கூறியுள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நளினியிடம் பேட்டி எடுக்க தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதையடுத்து நளினி இந்த தந்தியை அனுப்பியுள்ளார். அந்த தந்தியில், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை. பேட்டி தொடர்பாக யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும், தனது மகளின் நன்மை கருதி மீதி காலத்தை கழிக்கவே விருப்பம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், அரசிடம் விளக்கம் அளிக்கக் கோரி விசாரணையை 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.