பொதுத்தேர்தலில் சனத் ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட முடிவு

Posted by Kavi Kavi
Options
சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப்பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என சிறிலங்கா கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலின்போது மகிந்தவுக்கு ஆதரவாக சனத் ஜெயசூரிய விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.