தஞ்சை ஈழத்தமிழர் மாநாட்டில் பங்குபற்றச்சென்ற சிவாஜிலிங்கம் திருச்சியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்

Posted by Kavi Kavi
Options
தஞ்சாவூரில் நேற்று ஆரம்பமான ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குடிவரவு குடிய கல்வு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப் பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் பங்குபற்றும் நோக் குடன் அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு திருச்சி விமான நிலையத்தைச் சென்ற டைந்தார். விமானநிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்ல அனுமதி மறுத்த அதிகாரிகள் அவரை அங்கு தடுத்து வைத்தனர்.  சிறிது நேரத்தில் அதிகாரிகள் திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத் தில் அவரைத் திருப்பி அனுப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

என்ன காரணத்துக்காக சிவாஜிலிங் கத்தை நாட்டுக்குள் அனுமதிக்க அதிகாரி ள் மறுத்தனர் என்று அவருக்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் அறியப்பட்டது. இதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக இங்கு பரவலாகப் பேசப்பட்டது.